மண்ணுன்னும் உடல்

 மண்ணுன்னும் உடல் இங்கு
 மணிக்கொரு சுகம் வேண்டும்

 மக்கிடும் உடல் இங்கு
 மாதம் புது வகை தேடும்

 சாம்பலாகும் உடல் இங்கு
 தன் சூட்டால் மனம் கருக்கும்

 அழுகிடும் உடல் இங்கு
 அருந்திடும் உறவு நாடும்

 நழுவிடும் உயிர் இங்கு
 இன்று ஒரு நாள் உடல் தங்கும்.

No comments:

Post a Comment