விரியும் இளந்தளிரும் - நானும்பார் மயக்கும் இசைப் படைக்கும்,

புல்லாங்குழலும் பூங் குயிலும்,

இதழ் மலர்ந்து நீ உதிர்த்திடும் ஓர் வார்த்தை போலே

யுகம் கடந்து, என்னுள் எதிரொலித்திடாதே...மேகம் நழுவி விழும் முதல் துளி,

மண் தொடும் முன்னே, பெண்ணே உன்

கண் பார்த்திடும் வரம் ஒன்றே போதுமே...தேகம் நடுங்கும் மார்கழிக் குளிரில்,

அதிகாலை பொழுதில், விரியும்

இளந்தளிரும் - நானும்,

உன் பாதம் படர்ந்த வாசல் கோலம் கண்டு,

ஞாலம் கடக்கும் காதல் கொண்டோமே...