சபதம் நிறைவேறியது !!

"என்னை எரித்த உன்னை சும்மா விட மாட்டேன்,

உன் மகனை வைத்தே உன்னை எரிப்பேன் இது என் மீது சத்தியம்!!...";

-சபதம் நிறைவேறியது என்று

புன்னகைக்கிறது 'புகையிலை',

கல்லரை ஓரமாய் கரும் புகை வீசி...காணிக்கை...!!!

"எனக்கு வீடு கட்ட வேண்டும்;

என் பிள்ளைகளை அனுப்புகிறேன்,

அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பு...", என்று

கடவுள் என்னிடம் சொல்லட்டும்,

நிச்சயமாய் கொடுக்கிறேன்,

இரண்டு ரூபாய்கள்,

காணிக்கையாக.!!